நாட்டின் பெரும்பலான பிரதேசங்களில் இன்று (02) முதல் பகல் வேளைகளில் மழை பெய்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 mmக்கு அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
புத்தளத்தில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.
தகவல் – வளிமண்டவியல் திணைக்களம்
