அடுத்த வருட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் வெட்டுப்புள்ளிகளைப் பார்வையிடலாம் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவர்கள் admission.ugc.ac.lk
என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும்.
