வேகமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் சாரதிகளின் கவனக்குறைவு தொடர்பாக பொதுமக்கள் முறையிடுவதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
1995 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாட்டினை பதிவு செய்து கொள்ள முடியும்.
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வாகனம் செலுத்துதல் மற்றும் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
