கிராமசேவையாளர் என தன்னைப் அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் வயோதிபப் பெண்ணை அழைத்துச் சென்று சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் நேற்று கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு தனியாக நடந்து சென்ற 75 வயதுடைய முதியவரிடம் தன்னை கிராம சேவையாளர் என்று அறிமுகப் படுத்திக்கொண்ட நபர் , 70000 உதவித்தொகை உங்களுக்கு வந்துள்ளது எனக்கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
நந்தாவில் பகுதியில் வயோதிபப் பெண்ணிடம் இருந்த 2 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
