அகில இலங்கை ரீதியில் இடம் பெற்று வரும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகள போட்டியில் குண்டு எறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் எஸ்.மிதுன்ராஜ் வெண்கல பதக்கத்தைக் வென்றுள்ளார்.
தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் 14.49 மீற்ரர் தூரம் எறிந்து எஸ்.மிதுன்ராஜ் வெண்கல பதக்கத்தைக் வென்றுள்ளார்.
