இந்தியா – மும்பை மாட்டுங்கா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
கடந்த திங்கட்கிழமை சிறுமியுடன் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டு விழா நடன நிகழ்ச்சி ஒத்திகைக்காக வெளியே சென்று இருந்தனர். வகுப்பறையில் குறித் மாணவி தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியுடன் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் வகுப்பறைக்கு வந்துள்ளனர். அவ் மாணவர்கள் 2 பேரும் வகுப்பறையில் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியும் உள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.
சிறுமிக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பை தொடர்ந்து பெற்றோர் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடூமையை சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பாலியல் பலத்காரம் செய்த இரண்டு சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
