Child Fund நிறுவனத்தினுடைய நிதி அனுசரணையுடன், VIOCE மற்றும் ORHAN நிறுவனங்கள் இணைந்து CBR மற்றும் CBID நிகழ்ச்சி திட்டத்தினை பல்வேறு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இதனடிப்படையில் வட மாகாண சமூக சேவைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட வலைத்தளம் இன்றையதினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

