அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ் மாவட்ட பாடசாலைகள் பெற்று சாதனையைப் பதிவு செய்தனர்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைப் சேர்ந்த சொபிசன் 4.10 மீற்ரர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், தெல்லிப்பளை மகாஜன கல்லூரியைச் சேர்ந்த கஸ்மிதன் 3.90 மீற்ரர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த இ.அபிநயன் 3.80 மீற்ரர் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.
