இலங்கையில் உள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு உயர்மட்டு பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீன நிறுவனத்திற்கும், லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையத்தை தென்கொரியா நிறுவனம் ஒன்றுக்கும் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
