வடமராட்சி – மத்தொனிப் பகுதியில் பட்டதாரி இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று (02) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மத்தொனி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய தவராசா தர்சினி என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணம் இடம்பெற்றுள்ளது. தற்போது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே உயிரை மாய்த்துள்ளார்.
தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது சகோதரிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். “தனது மரணத்திற்கு காரணம் தானே” என்றும், “பெற்றோரை பார்த்துக் கொள்ளும் படியும்” கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரதானைப் பல்கலைக்கழத்தில் கலைப்பிரிவில் கல்வி பயின்று பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
