விடுதி ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வென்னப்புவ, பொரலஸ்ஸ பகுதியில் குறித்த சம்வவம் பதிவாகியுள்ளது. சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
