தாவடியில் மதுபானக்கடைக்கு அருகில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது. கோண்டாவிலைச் சேர்ந்த எம்.சிவநிதன் (வயது -34), இணுவிலைச் சேர்ந்த பவிதரன் (வயது – 30) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
