யாழ்.மாநகரில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் வாங்கிய உழுந்து வடையினுள் கரப்பான் பூச்சி காணப்பட்டுள்ளது.
குறித்த கடையில் இன்று (04) காலை உழுந்து வடையை வாங்கிய ஒருவர் வீட்டுக்கு கொண்டு சென்று வடையை சாப்பிட்ட போது வடையினுள் கரப்பான் பூச்சி இருப்பதை அவதானித்துள்ளார்.
இவ்விடயம், தொடர்பில் உடனடியாக யாழ்.மாநகரசபை சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த உணவகத்திற்கு உனடியாக சென்று உணவகத்தை பரிசோதித்த சுகாதார உத்தியோகத்தர்கள் உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
