கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில், கசிப்பு காய்ச்சிய ஒருவர் கோப்பாய் பொலிஸரால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் விசேட குற்றப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
