அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் ரவுடிக்கும்பல் உட் புகுந்து நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் உரிமையாளர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றது. மின்வெட்டு அமுலில் இருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
