கிளிநொச்சியின் பல பகுதிகளில் அண்மைக் காலமாக மக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி கொள்ளையடித்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைதுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அக்கராயன் பிரதேசத்தைச் சேர்ந்த 21 தொடக்கம் 32 வயதுக்குள் இடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
