சட்டவைத்தியரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், வைத்தியரையும் தாக்க முற்பட்ட 10 நபர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு முன்பாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நடு வீதியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் சட்ட வைத்திய அதிகாரியின் கார் பயணிப்பதற்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரையும், தாக்க முற்பட்டனர்.
இந்நிலையில், சட்ட வைத்தியரினால் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார் வைத்தியருடன் முரண்பட்ட பத்து நபரகளையும் கைது செய்தனர்.
குறித்த நபர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
