சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் கூரிய இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புனலாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது குறித்த நபர் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக சுன்னாகம் பொலிஸால் தெரிவித்தனர்.
