தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் மட்டக்களப்பு அலுவலக பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்ததாவது,
“எனது மட்டக்களப்பு காரியாலய பெயர்ப் பலகை இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டு சோலாரில் வேலை செய்யும் மின்குமிழ் அடங்கிய தொகுதியும் களவாடப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் எமது மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கும் மற்றும் ஊழல் மோசடிகள் பற்றி வெளிப்படுத்துகையில் தக்க பதலளிக்க முடியாமல் ஆதாரங்களை நிராகரிக்க முடியாமல் இவ்வாறான ஒட்டுக்குழுக்களின் அராஜரகம், மிரட்டல்கள் மற்றும் கொள்ளைகள் மட்டக்களப்பில் தலை தூக்குகின்து.
மீண்டும் மீண்டும் ஒட்டுக்குழு காலாச்சாரம் மட்டக்களப்பில் தலை தூக்குகின்றதா? என்னும் சந்தேகம் எனக்குள் எழுந்துள்ளது” எனர் தெரிவித்தார்.
