இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க உள்ளிட்ட நிர்வாக சபையினரை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சருக்கு அறிவிக்காமல் மகுப்புர போக்குவரத்து நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரையான விசேட பஸ் சேவையை நிறுத்தியமையாலேயே அமைச்சர் மேற்குறித்த அறிவிப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
