தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் வைத்தியர் என்பதை குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரை சோதனை செய்த போது ஒரு கிராம் 30 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரை மறித்த பொலிஸார் சோதனை செய்த போது கார் சாரதியிடம் இருந்து 600 மில்லிகிராம் ஹெரோயினும், காரில் பயணித்த மற்றுமொரு இளைஞரிடம் இருந்து 430 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதுடன், இரண்டு இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 27 வயதுடையவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கார்ச் சாரதி வைத்தியர் ஒருவரின் சகோதரர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
