மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்னும் போர்வையில், தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்து மட்டக்களப்பில் இன்று (05) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குடும்பிமலை, பேரிலாவெளி, மறுத்தானை, வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்த மக்களே வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
