கிளிநொச்சியில் அதி சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் 22 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (05) அதிகாலை, கிளிநொச்சி இரணமடுப் பகுதியில் பதிவாகியது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பஸ்ஸில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியாசலையில் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
