யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வைடையும், ரீயும் சாப்பபிட்ட வெளிநாட்டவர் ஒருவர் பணத்திற்காக ஐபோனை அடகு வைத்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவர் வடையும், ரீயும் சாப்பிட்டுள்ளார். உணவின் பெறுமதியான 170 ரூபாவை கட்டுவதற்காக உணவகத்தின் கணக்காளரிடம் 5000 ரூபா தாளைக் கொடுத்துள்ளார்.
5000 ரூபா மாற்றுவதற்கு இல்லையென கணக்காளர் தெரிவித்தார். இதனால் சினம் கொண்ட உணவருந்தியவர் தன்னிடம் இருந்த பெறுமதி மிக்க ஐபோனை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
சில மணித்தியாலங்களின் பின்னர் 170 ரூபாவை கொடுத்துவிட்டு ஐபோனை மீட்டுச் சென்றுள்ளார்.
