வவுனியா – மெனிக்பாமிலுள்ள புகையிரதக் கடவையை புனரமைத்து காவலாளியை அமர்த்துமாறு கோரி மக்கள் இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த புகையிரதக் கடவையில், நேற்று குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ள நிலையிலேயே குறித்த மக்கள் எதிர்ப்பு போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
“குறித்த கிராமத்தில் 1500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருவதாகவும், குறித்த கடவையினூடாக பாதுகாப்பற்ற போக்குவரத்தை தினமும் மேற்கொண்டு வருவதாகவும்” போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்த பறயனாளங்குளம் பொலிஸார் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறித்த கடவையில் பணியாற்ற மூவர் விருப்பம் விண்ணப்பித்துள்ளாதாகவும், சமிக்ஞை விளக்கினை பொருத்துவதற்கு புகையிரத திணைக்களத்திற்கு தாமும் தெரிவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
