தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் 2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தோல்வியடைந்தது.
வரவு – செலவுத் திட்டம் தவிசாளரால் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
த.தே.கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சைக்கு குழு ஆகிய கட்சிகளின் தலா ஒருவர் வீதமுமாக மொத்தமாக 7 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர், ஈ.பி.டி.பி.யின் ஒரு உறுப்பினர் என மொத்தமாக 8 பேர் எதிராக வாக்களித்தனர்.
