கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் புதிதாக திறக்கப்பட்ட கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட மின் உபகரணங்களின் பெறுமதி நான்கு லட்சம் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத் திருட்டுச்சம்பவம் தொடர்பில், தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
