இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘நான் டீசென்டான ஆளு’ பாடல் வெளியாகியுள்ளது.
துரை வரிகளில் வடிவேலு பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகின்றது.
