தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலி.தென்மேற்கு பிரதேசசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி.தென் மேற்கு பிரதேசசபையின் வரவு – செலவுத்திட்டம் இன்று (06) காலை சபையின் தவிசாளர் அ.ஜெபநேசனால் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்தை ஏகமானதாக 23 உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். 28 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த பிரதேசசபையில் இன்று 23 உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.
