டீசலின் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 10 ரூபாவால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபணம், மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் குறைத்துள்ளன.
ஆனாலும், குறித்த டீசல் விலை குறைப்பானது பேருந்து கட்டணங்களில் தாக்கம் செலுத்தவில்லை எனவும், 30 – 40 ரூபாவால் டீசலின் விலை குறைக்கப்பட்டிருந்தால் பேருந்து கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.
