மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அடுத்த வருடத்தில் இருந்து அதிகரிக்க வேண்டியது கட்டாயமானது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவையில் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சரால் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமால் மாற்றுவழிகள் பற்றி சிந்திக்கலாம் என அமைச்சர்கள் சிலரால் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மின்சாரக்கட்டணத்தை அதிகாரிக்காது வேறு மாற்றுவழிகள் இல்லையெனத் தெரிவித்த அமைச்சர், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாளொன்றுக்கு 6 மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.
