9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர் ஒருவர் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார்.
மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவனே இவ்வாறு பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் தரம் -08 இல் கல்வி பயிலும் போது க.பொ.சாதரண தரப் பரீட்சையில் தோற்றி சித்திபெற்று, தரம் 9 இல் உயர்தரப்பரீட்சையில் வணிகவியல் பிரிவில் தோற்றி மூன்று பாடங்களிலும் B தர சித்தி பெற்றுள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்காக வெளியாகிய வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்.
