யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் கொக்குவில் பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் வாடகை விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு வீதிகளில் காவலிகளால் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகத்திற்கு சென்று வரும் மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்புகளை காட்டுவதுடன், ஆபாச வார்த்தைகளால் மாணவிகளை பேசுவதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து 300 மாணவிகளின் கையெழுத்துடன் கூடிய கடிதம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ள நிலையில், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண் மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்புக்களை துறந்து காட்டும் காவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
