நாட்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
