நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துமாறு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தினால் பெருமளவான பணத்தினை மீதப்படுத்த முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அருத்தவருடம் பெப்ரவரி மாதத்துடன் கலைக்க முடியும், அத்துடன் பங்குனி மாதம் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும். எனவே, இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதன் மூலம் பெருந்தொகையான பணத்தை மீதப்படுத்தி பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
