யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் “ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை” (Integrated Newsroom) நேற்று (06) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பயிற்சி பெறுவதற்கான வசதிகளையும் உபகரணங்களையும் கொண்டதாக செய்தியறை உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
