யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இறந்தவரின் பெயரில் கள்ள உறுதி தயார் செய்து காணி விற்பனை மோசடியில் ஈடுபட்ட ஐவர் யாழ்ப்பாண விசே பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.ஓட்டுமடம் பகுதியில் உள்ள குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 1988ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆனால் உயிரிழந்தவர் குறித்த காணியை 2021ம் ஆண்டு விற்பனை செய்துள்ளதாக காணி உறுதி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணியை வாங்கியவர் மற்றும் சாட்சி கையொப்பமிட்டவர்கள் என நான்குபேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இக்காணி மோசடி விற்பனைக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சட்டத்தரணி கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் காணி மோசடி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
