அடுத்தவருடம் (2023) ஜனவரி மாதம் முதல் மின்சார பாவனையாளர்களுக்கு காகிதமற்ற மின்சாரப் பட்டியலும், பற்றுச்சீட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அமைச்சரால் மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டது.
வீதி விளக்குகளை பொருத்துதல், அவற்றை இயக்குவதை நெறிப்படுத்துதல் குறித்தும் மின்சார சபைக்கு வெளியே மேற்கொள்ள வேண்டிய பணிகளை தற்போதுள்ள ஊழியர்களை பயன்படுத்தி மேற்கொள்ளவும், தற்போது முன்னெடுக்க முடியாத பணிகளை பிரதேச சபைகளின் உதவியுடன் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
