வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவணையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பாடசாலைகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
போதைப்பொருள் ஒழிப்பு என்பது தனியே பொலிஸாரின் கடமை மாத்திரம் அல்ல. பொலிஸாரினால் மாத்திரம் அவற்றை ஒழிக்க முடியாது. மக்களின் பூரண ஆதரவு பொலிஸாருக்கு கிடைக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
