வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10 ஆம் திகதி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே காணாமால் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10 ஆம்,திகதி வடக்கு – கிழக்கு பகுதிகளில் இப்போராட்டம் மேற்க்கொள்ளப்பட உள்ளது.
இப்பேரணிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வர்த்தகர்கள், தமிழ் தேசிய அரசியல்கட்சிகள், பல்கலைக்கழ மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலகர்களையும் கலந்து கொள்ளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணிரானது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கப்பட்டு காந்தி பூங்காவில் நிறைவடையவுள்ளது.
வடக்கில் வவுனியா முருகன் கோவில் முன்றலில் ஆரம்பமாகி பழைய பேருந்து தரிப்பிடத்தில் நிறைவடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
