வடகொரியா – ரியாய்சங் என்ற மாகாணத்தில் 16 மற்றும்,17 வயது பாடசாலை சிறுவர்கள் 2 பேர் சட்ட விரோதமாக தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் வடகொரியா இராணுவத்தினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து 2 சிறுவர்களுக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி 2 சிறுவர்களும் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை மற்றும் இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் போன்ற கட்டுப்பாடுகள் வடகொரியா ஜனாதிபதி கிம்ஜங்கினால் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
