குளியலறையில் காணப்பட்ட வாளிக்குள் தவறி வீழந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் ஊர்காவற்துறை நரந்தானைப் பகுதியில் இடம்பெற்றது. சசீபன் கெற்றியான் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் ஒன்றுக்கு பெற்றோருடன் குழந்தை சென்றுள்ளது. குழந்தை வெளிப்புறத்தில் நின்று விளையாடியுள்ளது. பெற்றோர் உள்ளே வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், குழந்தையை காணவில்லை எனத் தேடிய நிலையில், தேவாலய குளியலறைக்குள் காணப்பட்ட வாளிக்குள் குழந்தை மூழ்கியிருந்தது.
மீட்கப்பட்ட குழந்தை ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
