மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி நெச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயற்சித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கல்லடி நெச்சிமுனையைச் சேர்ந்த 18 வயதுடைய அகிலன் துஷ்யந்தன் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.
“குறித்த மாணவன் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்க்கு அடித்தமையால் தந்தை அதற்கு பேசினார்” என்றும் இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேல்மாடியில் உள்ள அறையில், தூக்கில் தொங்கி உயிர் மாய்க்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவன் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
