சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன்., மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
