யாழ்ப்பாணத்தில் திருமணம் ஆகாத நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்துள்ள அதிர்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி வயிற்றுவலி காரணமாக கடந்த 5 ஆம் திகதி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
வைத்தியர்கள் பரிசோதித்த போது குறித்த சிறுமி ஏழரை மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் குறித்த சிறுமி அன்றைய தினமே குழந்தையை பிரசவித்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியிடம் மேற்க்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு 73 வயதுடைய முதியவரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த முதியவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
