உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திற்குள் பல கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதிக்குள் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலிலே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அரசியலமைப்பின் 98வது சரத்தின் 08 வது உபசரத்திற்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி விரைவில் வௌியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
