பிரபல நடிகை இந்தி நடிகை ஜான்வி கபூர் தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜான்வி கபூர் தெரிவித்ததாவது,
“எனக்கு தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடித்த “நானும் ரவுடிதான்” படத்தைப் பார்த்து அவருக்கு ரசிகை ஆகிவிட்டேன்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ‘நானும் ரவுடிதான்’ படத்தை 100 முறை பார்த்திருக்கிறேன். அந்த படத்தை பார்த்த பிறகு அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன்.
சேர் நான் உங்களுக்கு மிகப்பெரிய ரசிகை. நீங்கள் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றேன். நான் பேசியதை கேட்ட அவர் ஐயோ ஐயோ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
அவர் வருத்தப்படுகிறாரா அல்லது வெட்கப்படுகிறாரா என்று எனக்கு புரியவில்லை. விஜய் சேதுபதியின் ரியாக்ஷனை பார்த்து நான் அதிசயித்து விட்டேன்”- என்றார்.
