தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்களில் யோகிபாபுவும் ஒருவர்.
தற்போது கதாநாயகன் வேடம் உள்ள படங்களில் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் மலை என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து லக்ஷ்மி மேனன் நடிக்கிறார்.
லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் மலை படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
