சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலத்தில் தூசு அதிகரித்து காணப்படுவதால் வடமாகாணத்தில் வெளியில் பயணிப்போர் கட்டயமாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதய நோய் உள்ளவர்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு வேறு நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு வடமாகாண மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
