குப்பிளான் – தயிலங்கடவைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய பெண் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 138 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
